பரிஸ் : 60,000 மதிப்புள்ள கைக்கடிகாரம் கொள்ளை... கொள்ளையர் இருவர் கைது!
28 ஆவணி 2024 புதன் 18:45 | பார்வைகள் : 7750
பாதசாரி ஒருவரது விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை திருடிய இரு கொள்ளையர்களை BAC காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் ஓகஸ்ட் 27, நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது. 63 வயதுடைய ஒருவர் வீதியில் நடந்துசென்ற போது, அவரை பின் தொடர்ந்து சென்ற இருவர், பின்னால் தாக்கி கீழே விழுத்தி, அவர் அணிந்திருந்த கைக்கடிகாரத்தை திருடிக்கொண்டு சென்றுள்ளனர்.
Avenue Pierre-1er-de-Serbie வீதியில் வைத்து இச்சம்பவம் நண்பகல் 12.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய இரு கொள்ளையர்களையும் காவல்துறையினர் சிலமணிநேரங்களிலேயே கைது செய்தனர்.
17 ஆம் வட்டாரத்தின் Rue Théodore-de-Banville வீதியில் நின்றிருந்த இரு கொள்ளையர்களையும் சுற்றி வளைத்த BAC காவல்துறையினர், அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கொள்ளையிடப்பட்ட கடிகாரம் 60,000 யூரோக்கள் மதிப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan