Bondy : துப்பாக்கிச்சூடு.. ஒருவர் காயம்..!
28 ஆவணி 2024 புதன் 10:20 | பார்வைகள் : 8524
தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் Bondy நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஓகஸ்ட் 27, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் Avenue du Maréchal de Lattre de Tassigny வீதியில் வைத்து இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக 93 ஆம் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர். Citroën C3 ரக மகிழுந்தில் காத்திருந்த ஒருவரை நோக்கி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. 21 வயதுடைய ஒருவரே இதில் காயமடைந்துள்ளார். அவர் அதே பகுதியில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகிழுந்தில் பல்வேறு துப்பாக்கிக்குண்டுகள் துளைத்த அடையாளம் இருந்ததாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
9 மி.மீ கலிபர் வகை துப்பாக்கியினால் துப்பாக்கிச்சூட்டு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan