Val-de-Marne : நதியில் இருந்து சடலம் மீட்பு..!
26 ஆவணி 2024 திங்கள் 11:54 | பார்வைகள் : 9826
சென் நதியில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Charenton-le-Pont (Val-de-Marne) நகரில் ஓகஸ்ட் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆற்றங்கரையில் நின்றிருந்த ஒருவர், ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதை பார்த்துவிட்டு, உடனடியாக காவல்துறையினருக்கு எச்சரித்தார்.
விரைந்து வந்த அவர்கள், சடலத்தை மீட்டனர். உடற்கூறு பரிசோதனைகளுக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan