Mont Blanc : நான்கு நாட்களில் நால்வர் பலி.. !!
24 ஆவணி 2024 சனி 18:00 | பார்வைகள் : 8942
ஓகஸ்ட் 23, வெள்ளிக்கிழமை இரவு Mont Blanc மலையில் இருந்து தவறி விழுந்து 52 வயதுடைய ஒருவர் தவறி விழுந்து பலியாகியுள்ளார்.
கடந்த நான்கு நாட்களில் இடம்பெறும் நான்காவது பலி இதுவாகும். கோடைகாலம் ஆரம்பித்ததில் இருந்து மலையேற்றத்தில் ஈடுபடும் மலையேற்றவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. பலி எண்ணிக்கைகளும் அதிகரித்துள்ளன.
ஸ்பெயினைச் சேர்ந்த இரு மலையேற்றவாதிகள் கடந்த 21 ஆம் திகதி புதன்கிழமை 4,200 மீற்றர் உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலியாகியிருந்தனர். 26 மற்றும் 27 வயதுடைய இருவரது சடலங்களையும் ஜொந்தாமினர் மீட்டனர்.
அதன் பின்னர் மறுநாள் வியாழக்கிழமை 67 வயதுடைய ஒருவர் 4,600 மீற்றர் உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலியாகியிருந்தார்.
இந்நிலையில், நேற்று நான்காம் நாள் 52 வயதுடைய குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan