விண்வெளியில் மணிக்கு 1 மில்லியன் மைல் வேகத்தில் நகரும் மர்ம பொருள்- நாசா கண்டுபிடிப்பு
21 ஆவணி 2024 புதன் 15:19 | பார்வைகள் : 4464
விண்வெளியில் ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் மைல் வேகத்தில் நகரும் மர்ம பொருளை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
விண்வெளியில் இருக்கும் ரகசியங்களை கண்டறிய மனிதர்கள் ஆர்வமுடன் தான் இருக்கின்றனர். அதில், பல ஆச்சரிய விடயங்கள் இன்னும் கண்டறியப்படாமலே உள்ளது. அவற்றை கண்டறிவதற்கு அறிவியல் பெரிதும் உதவியாக இருக்கிறது.
அந்தவகையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA), விண்வெளியில் ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் மைல் (16,09,344 kmph) வேகத்தில் நகரும் மர்ம பொருளை கண்டறிந்துள்ளது.
அதாவது பால்வெளியில் இருந்து 1 மில்லியன் மைல் வேகத்தில் நகர்கிறது. பிளானட் 9 (Planet 9 project) என்ற திட்டம் மூலம் விஞ்ஞானிகள் இதனை கண்டறிந்துள்ளனர்.
இந்த மர்மப் பொருளுக்கு CWISE J1249 என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். மேலும், இந்த மர்ம பொருளானது இன்பிராரெட் ஒளியின் வழியாக விஞ்ஞானிகளின் கவனத்திற்கு வந்துள்ளது.
இதனை விண்கல்லாகவோ, விண்மீன்களாகவோ வகைப்படுத்த முடியவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மர்ம பொருளில் ஹைட்ரஜன் இல்லை.
எனவே, வாயு நிறைந்த ராட்சத கிரகம் மற்றும் குறைந்த நிறை கொண்ட நட்சத்திரம் ஆகிய இரண்டிற்கு இடைப்பட்ட பொருளாக வகைப்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan