பரா ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் நாட்களில் Champs-Élysées-Clémenceau நிலையம் திறக்கப்படமாட்டாது!
.jpg)
21 ஆவணி 2024 புதன் 13:28 | பார்வைகள் : 13683
நாளை ஓகஸ்ட் 22 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் செப்டம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை வரை Champs-Élysées-Clémenceau நிலையம் மூடப்படும் என RATP அறிவித்துள்ளது.
1 ஆம் மற்றும் 13 ஆம் இலக்க மெற்றோக்கள் இயக்கப்படும் குறித்த நிலையம் பரா ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற உள்ளதை அடுத்தே மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையத்துக்கு அருகே பல்வேறு போட்டிகள் இடம்பெற உள்ளதாலும், அதேபோல் Alexandre III மேம்பாலம் அருகே ரையதலோன் விளையாட்டுகள் இடம்பெற உள்ளதாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன..
அதேவேளை, முன்னதாக ஜூன் 17 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ள Tuileries நிலையம் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதியே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1