குரங்கு அம்மை தொற்றுக்கு தடுப்பூசியினை பரிசோதிக்க தயாராகும் பிரெஞ்சு நிறுவனம்!!
19 ஆவணி 2024 திங்கள் 18:25 | பார்வைகள் : 10821
குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை பரிசோதனை செய்ய தயாராக இருப்பதாக பிரெஞ்சு கல்வி நிறுவனமான L’Institut Pasteur அறிவித்துள்ளது.
இலாபமற்ற நோக்கில் இயங்கும் குறித்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான L’Institut Pasteur இத்தகவலை இன்று ஓகஸ்ட் 19, திங்கட்கிழமை அறிவித்துள்ளது. குரங்கு அம்மை உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், பிரான்சில் மிகுந்த விழிப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் முயற்சிகளை உலகின் பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. அதில் L’Institut Pasteur நிறுவனம் தடுப்பூசியினை தயாரித்துள்ளதாகவும், அதனை பரிசோதனை செய்துபார்க்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அரசாங்கத்தின் அனுமதியோடு இந்த பரிசோதனைகளை விரைவில் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan