இடதுசாரிகளை புறம் தள்ளி வலதுசாரிகள் ஆட்சி அமைப்பதே சிறந்தது.Gérald Darmanin.
9 ஆடி 2024 செவ்வாய் 07:52 | பார்வைகள் : 15075
வலதுசாரி கட்சிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தனது 16 வது வயதில் 'RPR' கட்சியில் இணைந்து செயல்பட்டு பின்னர் 'UMP' இன்றைய Les Républicains கட்சியின் வடமானிலங்களில் பல பகுதிகளில் பதவிகளை வகுத்து வந்த இன்றைய உள்துறை அமைச்சர் Gérald Darmanin அரசதலைவர் Emmanuel Macron அவர்களின் புதிய வரவை அடுத்து அவருடன் இணைந்து கொண்டார். Jean Castex பிரதமராக பதவி ஏற்ற போது இவர் உள்துறை அமைச்சராக பதவியேற்றார்.
Emmanuel Macron அவர்களின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான Gérald Darmanin நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமது Ensemble (Majorité présidentielle) கட்சி பெரும்பான்மை பெறாவிட்டால் அமைச்சு பதவியில் இருந்து மட்டுமல்ல அரசியலில் இருந்தும் ஒதுங்கி தனது தொகுதி மக்களுக்கு உழைக்கப் போவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் தேர்தலின் இரண்டாவது சுற்றில் '10e circonscription du Nord' பகுதியில் Ensemble கட்சியின் நாடாளுமன்றத் உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்.
"இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து ஆழும் கட்சி ஆட்சியமைப்பது ஒரு போதும் நடக்காது, அவர்களை புறம் தள்ளி வலதுசாரிகளுடன் ஆட்சியமைப்பதே இன்று பிரான்ஸ் தேசத்திற்கும் தேவை" என தன் கருத்தை பகிர்ந்துள்ளார். புதிய ஆட்சி அமைக்கும் வரை அவரே தொடர்ந்தும் உள்துறை அமைச்சராக இருந்து வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan