La Courneuve : 16 வயதுடைய சிறுவன் கைது..!
2 ஆடி 2024 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 25023
ஸ்கூட்டர் ஒன்றில் வேகமாக பயணித்து பெண் காவல்துறை வீரரை மோதித்தள்ளிய 16 வயதுடைய சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகல் La Courneuve (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. Cité des 4000 பகுதியின் Rue de Saint-Denis வீதியில், இரு பெண் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்கூட்டர் ஒன்றில் சிறுவன் ஒருவன் வேகமாக பயணிப்பதை பார்த்துவிட்டு அவரை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் குறித்த சிறுவன் ஸ்கூட்டரை நிறுத்தாமல் வேகமாகச் சென்று எதிரே நின்ற காவல்துறை வீரரை மோதி தள்ளிவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
இச்சம்பவத்தில் குறித்த வீரர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு முழங்காலிலும் கைகளிலும் காயம் ஏற்பட்டது. எலும்பு முறிவும் ஏற்பட்டது.
அதேவேளை, இரண்டாவது வீரர் குறித்த சிறுவன் மீது பாய்ந்து மடக்கிப் பிடித்து அவரைக் கைது செய்தார். அவனை காவல்நிலையம் அழைத்துச் செல்லும் வழியில் பெண் வீரரை கொண்டுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan