Bobigny : காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி..!
1 ஆடி 2024 திங்கள் 16:17 | பார்வைகள் : 20943
காவல்துறையினரின் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த வருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட காவல்துறை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Bobigny (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. காவல்துறை வீரர் ஒருவரின் தாயாரின் வீடொன்றுக்குள் நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார். வாகனம் நிறுத்தும் இடத்துக்குள் அவர் நுழைந்ததை அடுத்து, குறித்த காவல்துறை வீரர் அவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
முதலில் எச்சரிக்கைக்காக அவர் மீது படாதவாறு துப்பாக்கியால் சுட்டதாகவும், அதன் பின்னர் குறித்த நபர் காவல்துறை வீரர் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும், அதை அடுத்தே மேலதிக துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் Seine-Saint-Denis மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan