அகதி பலி!
28 ஆடி 2024 ஞாயிறு 15:03 | பார்வைகள் : 17884
கலே பகுதியில் இருந்து பிரித்தானியா நோக்கி படகில் பயணம் மேற்கொண்ட அகதி ஒருவர் பலியாகியுள்ளார்.
இன்று ஜூலை 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு கிடைத்த தகவலை அடுத்து பிராந்திய கடற்கண்காணிப்பு மற்றும் மீட்புக்குழுவினர் ( centre régional opérationnel de surveillance et de sauvetage) இந்த மீட்புப்பணியை மேற்கொண்டிருந்தனர். அகதி ஒருவர் படகு ஒன்றில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் உலங்குவானூர்தி மூலம் அகதி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய இரவில் மொத்தமாக 34 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan