பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இருந்து 344 அகதிகள் வெளியேற்றம்..!!
27 ஆடி 2024 சனி 14:19 | பார்வைகள் : 8541
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தின் நகரசபை கட்டிடத்தின் முற்றத்தில் சிறிய கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த 344 அகதிகள் நேற்று முன்தினம் ஜூலை 25 ஆம் திகதி வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் என மொத்தமாக 344 பேர் வெளியேற்றப்பட்டிருந்தனர். அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக அங்கு தங்களது இரவு நேரத்தை கழிக்கின்றனர். தங்குமிடம், போதிய சுகாதாரமின்மை காரணங்களினால் அவர்களை வெளியேற்ற காவல்துறையினர் தீர்மானித்தனர்.
அதையடுத்து, பரிஸ் காவல்துறையினரும் அவர்களோடு Utopia 56 எனும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து இந்த வெளியேற்றத்தை மேற்கொண்டனர். அவர்கள் அனைவரும் இல் து பிரான்சின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
'அவர்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்!' என Utopia 56 அமைப்பு தெரிவித்துள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan