ஏழு பேர் பலியாக காரணமாக இருந்த தீ... இருவருக்குச் சிறை..!
23 ஆடி 2024 செவ்வாய் 15:22 | பார்வைகள் : 12087
கடந்த வாரம் நீஸ் நகரில் (Nice) ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் பலியாகியிருந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் கவலைக்குள்ளாக்கிய நிலையில், அது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜூலை 17, புதன்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. வீடொன்றில் திடீரென பரவிய தீயினால் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் பலியாகியிருந்தனர். இந்த தீ பரவலின் பின்னணியில் மூன்றாவது நபரின் தலையீடு இருப்பதைக் கண்டுபிடித்த காவல்துறையினர், குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். மறுநாள் வெள்ளிக்கிழமை இரண்டாவது நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இருவரும், ஜூலை 22, நேற்று திங்கட்கிழமை நீஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு விசாரணைகளுக்கு முந்திய தடுப்புக்காவல் சிறைத்தண்டனக் வழங்கப்பட்டுள்ளது.
தீ பரவியிருந்த போது அவர்கள் இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய காட்சி கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், அவர்களது நோக்கம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan