RER B தொடரூந்தில் அதிர்ச்சி; இளம் பெண்ணுக்கு நடந்த துயரம்..!!
23 ஆடி 2024 செவ்வாய் 15:00 | பார்வைகள் : 18462
காவல்துறை பயிற்சியில் ஈடுபடும் இளம் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டுள்ளார். RER B தொடருந்தில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
21 வயதுடைய குறித்த பெண் காவல்துறையினருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் அவர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பு பயிற்சியினை முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். Cité-Universitaire மற்றும் Châtelet-les-Halles நிலையங்களுக்கிடையே பயணித்துக்கொண்டிருந்த போது அவர் மீது நபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளார்.
பின்னர், குறித்த நபர் Châtelet நிலையம் வந்ததும், அங்கிருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளார். கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் குறித்த நபர் தேடப்பட்டு வருகிறார்.
பிரான்சில் பொது போக்குவரத்துக்களில் வருடத்துக்கு 200 வரையான பாலியல் துன்புறுத்தல் பதிவாகின்றன என தரவுகள் தெரிவிக்கின்றன
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan