அரசியல் போர்நிறுத்தம் - அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி மக்ரோன்!
22 ஆடி 2024 திங்கள் 13:03 | பார்வைகள் : 10500
நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் நாட்களில் ‘அரசியல் போர்நிறுத்தம்’ ஒன்றுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் நான்கு நாட்களில் ஆரம்பிக்க உள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக பிரெஞ்சு அரசியலில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. பொது தேர்தல் இடம்பெற்றதும், எந்த ஒரு அரசியல் கட்சியும் பெரும்பான்மை இல்லாமல் பாராளுமன்றம் அமைக்கப்பட உள்ளமையும் அறிந்ததே. இந்நிலையில், அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் - மோதல்கள் வேண்டாம் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று ஜூலை 22 ஆம் திகதி Saint-Denis நகரில் உள்ள ஒலிம்பிக் கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மக்ரோன், அங்கு வைத்தே இதனைத் தெரிவித்திருந்தார்.
“ஒலிம்பிக் போட்டிகள் நாட்டின் ஒரு அங்கமாக இருக்கிறது. உலகம் முழுவதின் பார்வையும் பிரான்சில் குவிந்துள்ளது.” என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan