சென் நதியில் நீந்துகிறார் பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ..!!

15 ஆடி 2024 திங்கள் 14:00 | பார்வைகள் : 13735
பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ (Anne Hidalgo) நாளை மறுநாள் புதன்கிழமை சென் நதியில் நீந்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆன் இதால்கோவுடன் பரா-ஒலிம்பிக் போட்டிகளுக்கான தலைவர் Tony Estanguet, அவருடன் இல் து பிரான்சுக்காக பிராந்திய காவல் ஆணையர் Marc Guillaume ஆகியோரும் இணைந்து நீந்த உள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளுக்காக சென் நதி மிக வேகமாக தயார்ப்படுத்தப்பட்டு வருகிறது. ஆன் இதால்கோ பல தடவைகள் சென் நதியில் நீந்துவது உறுதி என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இறுதியாக அந்த நாள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சர் Amélie Oudéa-Castéra, கடந்த சனிக்கிழமை காலை சென் நதியில் நீந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1