■ நாளை முதல் விற்பனைக்கு வரும் புதிய தொடருந்து பயணச் சீட்டு..!
4 ஆனி 2024 செவ்வாய் 11:18 | பார்வைகள் : 14404
நாளை, ஜூன் 5 ஆம் திகதி புதன்கிழமை முதல் புதிய குறைந்தவிலை தொடருந்து பயணச் சீட்டு ஒன்று விற்பனைக்கு வருகிறது. இளைஞர்களை குறிவைத்து இந்த புதிய பயணச் சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
€49 யூரோக்களுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கும் அனைத்து TER சேவைகளிலும் இந்த பயணச்சீட்டை பயன்படுத்த முடியும். முதற்கட்டமாக வரும் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் மட்டுமே இந்த பயணச் சீட்டு பயன்படுத்த முடியும் எனவும், அடுத்தடுத்த வருடங்களில் வருடம் முழுவதற்கும் பயன்படுத்தக்கூடிய பயணச்சிட்டைகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
● முக்கிய நிபந்தனைகள்.
17 தொடக்கம் 27 வயதுடையவர்கள் மட்டுமே இந்த பயணச் சிட்டையை பயன்படுத்த முடியும்.
நவிகோ அட்டைகள் போன்று மெற்றோ, ட்ராம், பேருந்துகள் போன்றவற்றில் பயணிக்க முடியாது.
கிடைக்கக்கூடிய சேவைகள்.
Nantes > Lyon
Nantes > Bordeaux
Marseille > Toulouse > Bordeaux
Clermont-Ferrand > Paris
Béziers > Clermont-Ferrand
Paris > Limoges > Toulouse
Bordeaux > Toulouse > Marseille
இரவு நேர சேவைகள் (les lignes de nuit)
du Paris vers Toulouse, Rodez, Latour-de-Carol, Cerbère, Tarbes, Briançon, Nice et Aurillac
ஆகிய சேவைகளில் பயணிக்க முடியும்.
TER தொடருந்துகளுடன், Intercités இலும் பயணிக்க முடியும்.
TGV Inoui, Ouigo, Ouigo Classic மற்றும் Eurostar சேவைகள் இதில் அடங்காது.
●
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan