காவல்துறை வீரர் தற்கொலை..!
2 ஆனி 2024 ஞாயிறு 10:39 | பார்வைகள் : 17142
தேசிய காவல்துறைவீரர் ( police nationale ) ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பிரான்சின் தென்பகுதியில் உள்ள Hérault எனும் மாவட்டத்தில், Agde எனும் சிறு நகரம் ஒன்று உள்ளது. அங்குள்ள காவல்நிலையமொன்றில் பணிபுரிந்து வந்த 40 வயதுடைய வீரர் ஒருவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர், நேற்று சனிக்கிழமை காலை தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தலையில் சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துள்ளார்.
இவ்வருடத்தில் தேசிய காவல்துறையினரின் ஐந்தாவது தற்கொலை சம்பவம் இதுவாகும்.
தற்கொலை சிந்தனைகளுக்கு எதிராக அரசு ஒரு உதவி மையம் ஒன்றை ஆரம்பித்துள்ளமை அறிந்ததே. உதவிகள் தேவைப்பட்டால் 3114 எனும் இலக்கத்துக்கு (கட்டணமற்ற சேவை) அழைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan