'acide hyaluronique' எனும் ஊசி மருந்து வகைகளை வாங்குவதற்கு இனி மருந்து சீட்டு அவசியம். சுகாதார அமைச்சு.
2 ஆனி 2024 ஞாயிறு 07:04 | பார்வைகள் : 16897
தோல் மருத்துவர்கள், அழகியல் மருத்துவ சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்த நிலையில் இம்மாதம் முதல் 'acide hyaluronique' ஊசி மருந்துகளை வாங்குவதற்கு துறைசார் மருத்துவரின் மருந்துச் சீட்டு அவசியம் என பிரான்ஸ் சுகாதார அமைச்சு ஆணை பிறப்பித்துள்ளது.
பெண்கள், திருநங்கைகள் தங்களின் வீங்கிய உதடுகள், மறுவடிவமைக்கப்பட்ட மார்பு, மென்மையான தோல் போன்ற வற்றை ஏற்படுத்திக்கொள்ள 'acide hyaluronique' எனும் ஊசி மருந்துகளை பயன்படுத்தி வந்தனர். மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறையை துறைசார் மருத்துவர்கள் மட்டும் அன்றி சாதாரண அழகியல் நிலையங்களில் உள்ளவர்களும் போலியாக மேற்கொண்டு வந்தனர், இதனால் பல பெண்கள், திருநங்கைகள் பாரிய பின்விளைவுகளை சந்தித்துள்ளனர். பலர் உதட்டு, மார்பு புற்றுநோய்க்கு ஆளாகின்றனர்.
'acide hyaluronique' மருந்தானது ஒருவரின் உடல் நிலையைப் பொறுத்தே அளவை தீர்மானிக்க வேண்டும். இல்லையேல் அவை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். துறைசார் மருத்துவரின் சிகிச்சை இன்றி சாதாரண அழகியல் நிலையங்களில் உள்ளவர்களும் போலியாக பயன்படுத்தும்போது அவை ஆபத்தில் முடியும். எனவேதான் இனிவரும் காலங்களில் முன்பு சாதரணமாக விற்கப்பட்ட மேற்குறிப்பிட்ட ஊசி மருந்தினை துறைசார் மருத்துவரின் மருந்துச் சீட்டு இன்றி விற்பனை செய்வதாற்கு சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan