தொடர் அதிகரிப்பில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை..
1 ஆனி 2024 சனி 11:36 | பார்வைகள் : 17886
பிரெஞ்சு சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
மே 1 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இறுதி கணக்கெடுப்பின் படி பிரான்சில் தற்போது 77,647 பேர் சிறைவைக்கப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 6.1% சதவீதம் அதிகமாகும். அதேவேளை, ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி நிலவரப்படி 77,450 கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.
பிரான்சில் தற்போது 3,405 கைதிகள் மெத்தையினை தரையில் போட்டுக்கொண்டு உறங்குவதாகவும், பிரான்சில் மொத்தமாக 61,966 கைதிகளுக்கான இடங்கள் மாத்திரமே உள்ளதாகவும், 16,000 இற்கும் அதிகமான கைதிகள் மேலதிகமாக சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர, 17,558 கைதிகள் இலத்திரனியல் காப்புகளுடன் விடுதலை செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan