எதிர்வரும் யூன் 13 (ligne de métro 11 ) 11 இலக்க நிலக்கீழ் தொடரூந்து நீள்கிறது.
31 வைகாசி 2024 வெள்ளி 07:59 | பார்வைகள் : 11737
நீண்ட நாட்கள் 11 இலக்க நிலக்கீழ் தொடருந்து சேவை நீடிப்பதற்ஙகான வேலைகள் நடைபெற்று, நிறைவு கண்டுள்ள நிலையில் எதிர்வரும் யூன் 13ம் திகதி தன் நீண்ட பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சேவை நீடிப்பு பணியின் பணிப்பாளர் Pierre Florent ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் Châtelet தொடரூந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு porte de lilas தொடரூந்து நிலையம் வரை பயணித்து வந்த 11ம் இலக்க சேவை யூன் 13ம் திகதி க்குப் பின்னர் les villes des Lilas, Romainville, Noisy-le-Sec, Montreuil மற்றும் Rosny-sous-Bois. வரை பயணிக்கவுள்ளது.
கடந்த காலங்களில் இந்த சேவையை நாளொன்றுக்கு சுமார் 100,000 பயணிகள் பயன்படுத்தி வந்தனர் இனிவரும் காலத்தில் இந்த சேவையை நாளொன்றுக்கு சுமார் 190,00 பயணிகள் மேலும் அதிகமாக பயன்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 கிலோமீட்டர் தூரத்தினை அதிகரிக்க 1.5 பில்லியன் யூரோக்கள் செலவிடப்பட்டுள்ளது எனவும் 2016ம் ஆண்டில் தொடங்கிய சேவை நீடிப்பு பணிகள் COVID-19 காரணமாக ஓராண்டு தடைப்பட்டது மீண்டும் நடைபெற்று முடிந்துள்ளது எனவும் சேவை நீடிப்பு பணியின் பணிப்பாளர் Pierre Florent மேலும் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan