மகிழுந்துக்குள் மறந்துவிடப்பட்ட ஐந்து மாத குழந்தை.. சடலமாக மீட்பு..!!
29 ஆனி 2024 சனி 17:10 | பார்வைகள் : 8680
ஐந்து மாத குழந்தை ஒன்று மகிழுந்து ஒன்றுக்குள் மறந்துவிடப்பட்ட நிலையில், மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் Toulouse (Haute-Garonne) நகரில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Thales எனும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், அங்குள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மகிழுந்து ஒன்றுக்குள் குழந்தை ஒன்று மயங்கி இருப்பதை பார்த்து விட்டு அவசர இலக்கத்துக்கு அழைத்துள்ளார்.
விரைந்து வந்த SAMU மருத்துவக்குழுவினர், மகிழுந்தின் கண்ணாடியை உடைத்து குழைந்தையை மீட்டனர். ஆனால் குழந்தை மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது.
பத்து நாட்களுக்கு முன்பாக Carpentras (Vaucluse) நகரிலும் இதே போன்ற ஒரு சம்பவத்தில் 7 மாத குழந்தை ஒன்று உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan