வெளிநாடுகளில் முடிவடைந்தது வாக்களிப்பு. தேர்தலுக்கு அமோகமான வெற்றி.
27 ஆனி 2024 வியாழன் 18:44 | பார்வைகள் : 10897
வெளிநாடுகளில் வசிக்கின்ற பிரஞ்சு மக்கள் பிரான்சில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிக்கும் கடைசி நாள் இன்றாகும். வழமையை விடவும் இம்முறை அதிக நாட்டத்துடன் அவர்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டார்கள் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துக்கணிப்புகள் தீவிர வலதுசாரி கட்சிகளான Rassemblement National+soutien Les République 36% சதவீத வாக்குகளை பெறுவார்கள் எனவும், Nouveau Front Populaire 29% சதவீத வாக்குகளை பெறுவார்கள் எனவும், நடைமுறை ஆட்சியில் உள்ள Ensemble 19.5% சதவீத வாக்குகளை பெறுவார்கள் எனவும் தெரிவித்திருக்கும் நிலையில் வெளிநாடுகளில் வசிக்கின்ற பிரஞ்சு நாட்டவர்களுக்கான வாக்களிப்பு இன்று மாலையோடு நிறைவுக்கு வந்திருக்கிறது.
'ஒன் லைன்' ஊடாக நடைபெற்ற வாக்களிப்பில் சுமார் நான்கு லட்சத்து 10 ஆயிரம் பேர் வாக்குகளைச் செலுத்தி உள்ளனர். கடந்த 2022 தேர்தலுடன் ஒப்பிடுகையில் வெளிநாடுகளில் இருந்து வாக்குச் செலுத்தியவர்களது எண்ணிக்கை ஏறத்தாழ இரு மடங்காகும், 2022ல் 2லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்களே வாக்களிப்பில் பங்கெடுத்துக் கொண்டனர். இந்த அதிகரித்த வாக்களிப்பானது பிரான்ஸ் நாட்டவர்கள் இம்முறை தேர்தலில் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan