கோடைக்கால மலிவு விற்பனை (26/06/ முதல் 23/07 வரை) இன்று முதல் ஆரம்பம்.
26 ஆனி 2024 புதன் 08:08 | பார்வைகள் : 12011
பிரான்சின் பிரதான நிலப்பரப்பிலும், கடல் கடந்த மாகாணங்களிலும் கோடைக்கால மலிவு விற்பனை இன்று முதல் ஆரம்பமானது. இந்த மலிவு விற்பனை எதிர்வரும் 23/07 வரை தொடர்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் விற்பனை நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் பொருட்களை மலிவான விலையில் விற்று தீர்க்க விற்பனையாளர்களுக்கு இது ஒரு வழியாக அமையும் அதேவேளை, நுகர்வோருக்கும் கொள்வனவு செய்ய விரும்புகின்ற பொருட்களை அதனுடைய விலையில் இருந்து குறைவான விலையில் வாங்கிக் கொள்வதற்கு வழியாகவும் இது அமைகிறது.
இருப்பினும் இந்த மலிவு விற்பனை காலத்தில் பல மோசடிகளும் இடம் பெறுவதுண்டு. வளமையான விலையை அதிகரித்துவிட்டு மீண்டும் அதில் விலை கழிவு என்பது போல மாற்றி அமைக்கின்ற திட்டங்களும் அடிக்கடி நடைபெறுவதுண்டு. எனவே நுகர்வோர் அவதானமாக இருப்பதே இதற்கு சிறந்த வழியாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan