Paristamil Navigation Paristamil advert login

’நாங்கள் விடுவதாய் இல்லை... பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சிறுமி குறித்து ஜனாதிபதி மக்ரோன்..!!

’நாங்கள் விடுவதாய் இல்லை... பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சிறுமி குறித்து ஜனாதிபதி மக்ரோன்..!!

23 ஆனி 2024 ஞாயிறு 13:29 | பார்வைகள் : 8541


கடந்த வாரம் Courbevoie நகரில் வைத்து சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அதனைக் கண்டித்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை Courbevoie நகரில் வெள்ளை பேரணி ஒன்று இடம்பெற்றது. பல நூறு மக்கள் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து பேரணியில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இது தொடர்பில் தெரிவிக்கையில், 'யூத எதிர்ப்பு, இனவாதம் மற்றும் அனைத்து வெறுப்பும் நம் ஒவ்வொருவரையும் சேதப்படுத்துகிறது. நாம் இதனை விடப்போவதில்லை. நாங்கள் தண்டிப்போம்!' என தெரிவித்தார்.

சிறுமி உடல்நலக்குறைவுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் யூத சிறுமி என்பதால் அவர் மிரட்டப்பட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்