பரிஸ் : ஜப்பானிய வாள் ஒன்றை திருட முயற்சி.. நான்கு விரல்களை இழந்த சோகம்....!!
22 ஆனி 2024 சனி 13:56 | பார்வைகள் : 9477
'கட்டானா' என அறியப்படும் ஜப்பானிய வாள் ஒன்றை திருடும் முயற்சி ஒன்று பரிசில் இடம்பெற்றது.
இன்று ஜூன் 22, சனிக்கிழமை காலை 6 மணி அளவில் Gare de l'Est தொடருந்து நிலையத்தில் குறித்த வாளுடன் நபர் ஒருவர் பயணித்துள்ளார். அதனை இரு திருடர்கள் திருட முற்பட்டுள்ளனர். இந்த திருட்டு முயற்சியின் போது இரு தரப்புக்கும் இடையே இழுபறி நிலவியது.
அதையடுத்து, திருடர்கள் குறித்த நபரை வாள் ஒன்றினால் வெட்டியுள்ளனர். இதில் அவரின் நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்டன.
அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
தாக்குதல் மேற்கொண்ட இருவரை தொடருந்து நிலைய பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்தனர். பரிஸ் 10 ஆம் வட்டார காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan