இசைத்திருவிழாவின் போது கத்திக்குத்து தாக்குதல்.. ஐவர் காயம்..!
22 ஆனி 2024 சனி 13:26 | பார்வைகள் : 11621
நேற்று ஜூன் 21, வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இசைத்திருவிழாவின் போது (Fête de la Musique) கத்திக்குத்து தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் அதிகாலை 2 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இசை நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, அங்கு பார்வையாளர்களாக நின்றுகொண்டிருந்த சிலரிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அதுவே பின்னர் கத்திக்குத்து தாக்குதலாகவும் மாறியுள்ளது.
ஒருவரை ஒருவர் தாக்கி, மொத்தமாக ஐவர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் படுகாயமடைந்து அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மோதலில் ஈடுபட்டதாக நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan