Morangis : குடும்பத்தை மிரட்டி பணம் பறித்த கொள்ளையர்கள்..!
21 ஆனி 2024 வெள்ளி 19:49 | பார்வைகள் : 17578
வீடொன்றுக்குள் நுழைந்த நான்கு கொள்ளையர்கள், அங்கு வசித்த குடும்பத்தினரை மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் நகை போன்றவற்றை திருடியுள்ளனர்.
புதன்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் Morangis (Essonne) நகரில் இடம்பெற்றுள்ளது. முகக்கவசம் அணிந்து வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர் நால்வர், அப்பா-அம்மா இருவரும் அவர்களது 11 வயதுடைய மகனையும் ஆயுதமுனையில் பிடித்து வைத்து மிரட்டியுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த பணம் நகைகளை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இச்சம்பவத்தின் போது சிறுவனின் தந்தை இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அப்பகுதி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan