தென்மேற்கை சூறையாடும் வெள்ளம்... ஒருவர் பலி..!!
20 ஆனி 2024 வியாழன் 16:25 | பார்வைகள் : 11023
வெள்ளத்துக்குள் சிக்கி 73 வயதுடைய ஒருவர் பலியாகியுள்ளார். பிரான்சின் தென்மேற்கு பகுதியான Lormont (Gironde) இல் இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கடந்த இரு நாட்களாக பிரான்சின் தென் மற்றும் தென்மேற்கு பகுதிகளில் அடை மழை பெய்து வருகிறது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இந்நிலையில், கணவரைக் காணவில்லை என பெண் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, 73 வயதுடைய குறித்த நபர் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை பிற்பகல் அவர், மகிழுந்து தரிப்பிடம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளத்தில் அடித்த செல்லப்பட்டு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan