Paristamil Navigation Paristamil advert login

சிங்கத்தை போன்று கர்ஜித்து அசத்திய சிறுமி... 

சிங்கத்தை போன்று கர்ஜித்து அசத்திய சிறுமி... 

29 சித்திரை 2024 திங்கள் 15:11 | பார்வைகள் : 4304


எக்ஸ் வலைதளத்தில் சிங்கத்தின் கர்ஜனையை கச்சிதமாக பின்பற்றும் ஒரு சிறுமியின் காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.

குறித்த வீடியோவில், ரிலே கே ஸ்காட் என்ற அந்த சிறுமி, சக்தி வாய்ந்த சிங்கம் கர்ஜிப்பது போன்று தனது வாயால் கர்ஜித்து காட்டி அவரது அசாத்திய திறனை வெளிப்படுத்துகிறார்.

https://twitter.com/i/status/1783545350621425941

மேலும் ரிலேயின் தாயார், தனது மகளிடம் உனது சிங்க சத்தம் அனைவருக்கும் பிடித்திருந்ததாகவும், அது உண்மை என்று அவர்கள் நினைத்ததாகவும் கூறுவதையும் காண முடிகிறது.

பேட்டன் என்ற பயனரால் பகிரப்பட்ட அந்த காணொளி 20 லட்சத்திற்கும் அதிகமாக பார்வைகளை பெற்று பயனர்கனை கவர்ந்துள்ளது.

காணொளியை பார்த்த பயனர்கள் பலரும் சிறுமியின் அசாத்திய திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்