RER A : வேலை நிறுத்தம்!

29 வைகாசி 2024 புதன் 16:28 | பார்வைகள் : 9661
RER A தொடருந்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
மே 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. ஊழியர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படவேண்டும் என கோரி இந்த பணி புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
Base-RATP, CGT RATP, FO RATP மற்றும் Unsa RATP ஆகிய நான்கு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களே இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
நாளை 30 ஆம் திகதி இரவு 10 மணி முதல் ஜூன் 1 ஆம் திகதி காலை 6 மணி வரை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1