Charenton-le-Pont : முதியவருக்கு நடந்த கொடுமை!
28 வைகாசி 2024 செவ்வாய் 14:00 | பார்வைகள் : 16175
கொள்ளையர்கள் நால்வர் 79 வயதுடைய முதியவர் ஒருவரை தாக்கி, அவரிடம் இருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை திருடிச் சென்றுள்ளனர்.
Charenton-le-Pont (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. rue Camille-Mouquet வீதியில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் மகிழுந்தை நிறுத்திவிட்டு இறங்கிய குறித்த முதியவரை நான்கு கொள்ளையர்கள் சூழ்ந்துகொண்டனர்.
அவரது முகத்தில் கண்ணீர்புகை வீசி, அவரை தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
முதியவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு பற்கள் உடைக்கப்பட்டதாகவும், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan