Seine-Saint-Denis : வீடொன்றில் இருந்து பாரிய ஆயுதங்கள் மீட்பு.!
28 வைகாசி 2024 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 8042
வீடொன்றில் இருந்து போதைப்பொருட்க, துப்பாக்கிகள், வெடிமருந்துகள் போன்றவை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Villemomble (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. முன்னதாக சனிக்கிழமை காலை Le Raincy-Villemomble-Montfermeil (RER) நிலையத்தில் வைத்து ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் போதைப்பொருள் விற்பனையாளர் எனவும், அவரிடம் இருந்து 130 கிராம் கஞ்சா இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, அவர் வசிக்கும் Villemomble நகரில் உள்ள வீடு சோதனையிடப்பட்டது. அதன்போது வீட்டில் இருந்து காலாஷ்நிகவ் (Kalashnikov) ரக நீண்ட துப்பாக்கிகளும், தானியங்கி பிஸ்ட்டல் துப்பாக்கிகளும், 253 வரையான 7.62 mm கலிபர் துப்பாக்கி சன்னங்களும், 4.7 கிலோ MDMA போதைப்பொருளும், கிலோ கணக்கில் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் Seine-Saint-Denis காவல்துறையினர் (SDPJ 93) விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan