Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரத்தில் வீடு வாடகைக்கு!

ஈஃபிள் கோபுரத்தில் வீடு வாடகைக்கு!

1 சித்திரை 2024 திங்கள் 18:23 | பார்வைகள் : 12644


ஈஃபிள் கோபுரத்தின் உச்சியில் ஆடம்பர வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மிக விரைவில் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து, அவ்வீடு வாடகைக்கு விடப்பட உள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை இத்தகவலை ஈஃபிள் கோபுரம் தனது X சமூகவலைத்தளமூடாக பதிவிட்டுள்ளது. அந்த வீடு எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஒரு சிறிய காணொளியையும் பதிவிட்டுள்ளது. 

கடந்த பல வாரங்களாக இடம்பெற்று வந்த சிரமான கட்டுமான பணியில் இந்த வீடு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அதிஷ்ட்டசாலி ஒருவருக்கே இந்த வீடு கிடைக்க உள்ளது!’ என குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், மேற்படி தகவல் இன்று ஏப்ரல் 1, முட்டாள்கள்  தினத்துக்காக உருவாக்கப்பட்ட கட்டுக்கதை ஆகும். அப்படி எந்த ஒரு வீடும் அங்கு கட்டப்படவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்