Hauts-de-Seine : பூங்காவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!!

30 பங்குனி 2024 சனி 07:02 | பார்வைகள் : 11545
Sceaux (Hauts-de-Seine) நகரில் உள்ள பூங்கா ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Collège Marie-Curie பாடசாலையைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் நேற்று மார்ச் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை1 Parc de Sceaux பூங்காவுக்கு சுற்றுலா சென்ற நிலையில், அங்கு மரம் ஒன்றில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் ஒரு சடலத்தை பார்வையிட்டுள்ளனர். பிற்பகல் 1.20 மணி அளவில் சடலம் பார்வையிட்டதை அடுத்து, உடனடியாக மருத்துவக்குழுவினர் எச்சரிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவக்குழுவினர் குறித்த சடலத்தை மீட்டனர்.
உடனடியாக அங்கு உளநல சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆசுவாச சிகிச்சை அளிக்கப்பட்டது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1