தபாலகத்தில் ஆயுதமுனையில் கொள்ளையிட்ட மூவர் கைது!!
27 சித்திரை 2024 சனி 09:02 | பார்வைகள் : 8701
Évry நகர தபாலகத்தில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
34 தொடக்கம் 36 வயதுடைய குறித்த மூவரும் இரத்தவங்கி ஒன்றில் பணிபுரிகிறதாகவும், கடந்த மார்ச் 15 ஆம் திகதி Évry (Essonne) நகரில் உள்ள தபாலகத்துக்குள் ஆயுதத்துடன் நுழைந்து அங்கிருக்கும் ஊழியர்களை அச்சுறுத்தி €100,000 யூரோக்கள் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர்.
தீவிர விசாரானைகளின் பின்னர் குறித்த மூவரும் நேற்று முன்தினம் ஏப்ரல் 25 ஆம் திகதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது Fleury-Mérogis, Nanterre (Hauts-de-Seine) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan