தொடருந்து மோதி பாதசாரி பலி!!
12 சித்திரை 2024 வெள்ளி 16:07 | பார்வைகள் : 19061
இன்று ஏப்ரல் 12, வெள்ளிக்கிழமை காலை பாதசாரி ஒருவர் தொடருந்து ஒன்றுடன் மோதுண்டு பலியாகியுள்ளார்.
பரிசில் இருந்து Clermont-Ferrand நகரை இணைக்கும் SNCF இற்கு சொந்தமான தொடருந்து ஒன்று இன்று காலை பரிசில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. அது La Ferté-Hauterive (Allier) நகரை சென்றடையும் போது காலை 10 மணி அளவில் பாதசாரி ஒருவரை மோதி தள்ளியது. குறித்த பாதசாரதி தொடருந்து வருவதை அறியாமல் கடவையை கடக்க முற்பட்ட வேளையிலேயே தொடருந்தில் மோதுண்டுள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து மூன்று மணிநேரம் வரை போக்குவரத்து தடைப்பட்டது. 350 பயணிகள் குறித்த தொடருந்தில் தரித்து நிற்கவேண்டி ஏற்பட்டது. சடலம் மீட்கப்பட்டு, போகுவரத்து நண்பகலின் பின்னர் சீர்செய்யப்பட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan