ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் நிகழ்வு! - 35 படகுகளில் காவல்துறையினர் அணிவகுப்பு!
10 சித்திரை 2024 புதன் 09:00 | பார்வைகள் : 10322
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் நிகழ்வின் போது பாதுகாப்புக்காக 35 படகுகளில் காவல்துறையினர் சென் நதியில் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.
ஆறுகளை பாதுகாக்கும் காவல்துறையினரை (brigade fluviale) நேற்று ஏப்ரல் 9, செவ்வாய்க்கிழமை உள்துறை அமைச்சர் Gérald Darmanin சென்று பார்வையிட்டிருந்தார்ர். ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் நிகழ்வு வரும் ஜூலை 26 ஆம் திகதி இடம்பெற உள்ளது. இந்த நிகழ்வின் பெரும்பான்மையானவை சென் நதியிலும், அதன் கரைகளிலுமே இடம்பெற உள்ளது. அதன்போது 100 வரையான brigade fluviale காவல்துறையின் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.
மொத்தமாக்க 35 படகுகளில் சென் நதியில் அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சென் நதிக்குள் யாரேனும் விழுந்தால் உடனடியாக அவர்களை காப்பாற்றவும் அணி தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan