பரிஸ் : பாடசாலை அதிபருக்கு கொலை மிரட்டல்!
1 பங்குனி 2024 வெள்ளி 14:36 | பார்வைகள் : 18521
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
20 ஆம் வட்டாரத்தில் உள்ள lycée Maurice-Ravel லீசேயின் அதிபருக்கே இந்த கொலை மிரட்டல் சமூகவலைத்தளமூடாக விடுக்கப்பட்டுள்ளது. குறித்த லீசேயில் பயிலும் இஸ்லாமிய பெண் ஒருவர் அணிந்திருந்த பர்தா ஆடையினை (Veil) அகற்றும்படி அதிபர் அறிவுறுத்தியுள்ளார். புதன்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆனால் 19 வயதுடைய குறித்த மாணவி அதற்கு இணங்க மறுத்துள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து, லீசே முழுவதும் இந்த தகவல் பரவியது. பாடசாலைகளில் பர்தா உடை அணிவதற்கு பிரான்சில் அண்மையில் தடை விதிக்கப்பட்டதாக அதிபர் வலியுறுத்தினார்.
இதனை ஏற்க மறுத்த மாணவி, வீட்டுக்குத் திரும்பியுள்ளார். பின்னர் அவர் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார். அதில் பாடசாலை அதிபர் தன்னைத் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் விசாரணைகளில் மேற்படி அனைத்து சம்பவங்களும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், பாடசாலை அதிபருக்கு, அம்மாணவியின் குடும்பத்தினரிடம் இருந்து கொலை மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan