Charles de Gaulle விமான நிலையத்தில் பாரிய மாசடைவு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!
29 மாசி 2024 வியாழன் 15:11 | பார்வைகள் : 12246
Charles de Gaulle விமான நிலையத்தில் அதிகளவான மாசடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. périphérique வீதியில் உள்ள அளவில் விமான நிலையத்திலும் மாசடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வளிமாசடைவை கண்காணிக்கும் Airparif நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதும் பகுதி பகுதியாக வளிமண்டல மாசடைவு கண்காணிக்கப்பட்டதில் அதிகளவான மாசு துகள்கள் périphérique சுற்றுவட்ட வீதியை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதற்கு இணையாக CDG விமான நிலையத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கன சென்ரிமீற்றர் இடைவெளியில் 23,000 துகள்கள் பரவி இருப்பதாகவும், அது சுவாசிப்பதற்கு உகந்ததல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan