பரிஸ் : ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு தகவல்கள் அடங்கிய கணணி மற்றும் USB ஆகியவை திருட்டு!

28 மாசி 2024 புதன் 06:33 | பார்வைகள் : 10480
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில், போட்டிகளின் பாதுகாப்பு தகவல்கள் அடங்கிய கணணி ஒன்று தொடருந்தில் இருந்து திருடப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளின் ஊழியர் ஒருவர், மடிக்கணணி ஒன்றும், usb கருவிகள் சிலவற்றுடனும் Gare du Nord தொடருந்து நிலையத்தில் இருந்து Creil (Oise) நகர் நோக்கி பயணித்துள்ளார். ஆனால் சில நிமிடங்களிலேயே குறித்த கணணி இருந்த பை திருடப்பட்டுள்ளது. பெப்ரவரி 26 ஆம் திகதி திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கணணியில் மிகவும் இரகசியமான உள்ளக பாதுகாப்பு தகவல்கள் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டு, உடனடியாக அவர் காவல்துறையினரை அழைத்துள்ளார். வழக்கும் பதிவு செய்துள்ளார்.
காலை 6.30 மணியில் இருந்து 7 மணிக்குள்ளாக மிகவும் நெருக்கடியான நேரத்தில் அவர் தொடருந்தில் பயணம் செய்திருந்ததாகவும், அந்த நெருக்கடிக்குள் பை திருடப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1