Paristamil Navigation Paristamil advert login

பனிச்சரிவில் சிக்கி நால்வர் பலி!

பனிச்சரிவில் சிக்கி நால்வர் பலி!

25 மாசி 2024 ஞாயிறு 17:16 | பார்வைகள் : 10374


Puy-de-Dôme நகரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நால்வர் பலியாகியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலின் பின்னர் இந்த பனிச்சரிவு Massif du Sancy பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பனிச்சறுக்கு விளையாட்டின் வீரர்கள் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத நிலையில், பாரிய பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி நான்கு வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

உலங்குவானூர்திகள் மூலம் மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.

Puy-de-Dôme நகர காவல்துறையினர் விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்