உக்ரேனுக்கு ஆதரவாக பரிசில் ஆர்ப்பாட்டம்!

25 மாசி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 16284
இரஷ்ய-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், உக்ரேனுக்கு ஆதரவாக பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
நேற்று பெப்ரவரி 24, சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் Place de la République பகுதியில் இடம்பெற்றது. உக்ரேனிய கொடியை ஏந்திக்கொண்டு பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரஷ்யாவின் ஆக்கிரமிப்பை நிறுத்த, சர்வதேச நாடுகள் முயற்சிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் 2,800 பேர் பங்கேற்றிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1