கார்-து-லியோன் தாக்குதலாளியின் பிரான்ஸ் மீதான வன்மம் - பல மாதங்களாக வெளியிட்ட காணொளிகள்!!
4 மாசி 2024 ஞாயிறு 17:48 | பார்வைகள் : 12958
நேற்று கார்-து-லியோனில் கத்தி மற்றும் சுத்தியல் போன்ற ஆயதங்களால் தாக்குதல் நடாத்திய குற்றவாளி கடந்த ஒரு மாதமாக டிக்-டொக் போன்ற தளங்களில் மிகவும் அச்சுத்தலான காணொளிகளை வெளியிட்டும் இருந்துள்ளார்.
மாலியைச் சேர்ந்த இவரால் இந்தத் தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டே நடாத்ப்பட்டதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

«இன்னும் மூன்று மாதத்தில் அல்லா தனது சொர்க்கத்தில் என்னை இணைத்துக் கொள்வார்»
«நான் பிரெஞ்சு மக்களை மிகவும் வெறுக்கின்றேன். நான் ஒரு போதும் பிரெஞ்சுக் குடிமகனான விரும்பவில்லை»
«பிரான்ஸ் எனக்கான வாழ்வுரிமையயை வழங்கவில்லை. இதனால் நான் பிரான்சை முற்றாக வெறுக்கிறேன். பிரெஞ்சு மக்கள் என்னை மதிக்கவில்லை»
«பிரான்ஸ் எனது பாட்டன் பாட்டியை அடிமைகளாகக் கொண்டு வந்தது»
எனவும், இன்னொரு காணொளியில்
«மக்ரோனிற்கு வருத்தம் முத்திவிட்டது. தெருவில்; ஆடைகளைக் களைந்து விட்டு, எங்கே எனது ஆபிரிக்கா, எங்கே எனது ஆபிரிக்கர்கள், எனக் கத்தியபடி அலையப் போகின்றார்»
எனவும் முழுமையான வெறுப்பையும் குரோதத்தினையும் விசமாகக் கக்கி உள்ளார்.
பிரான்சில் தொடர்ச்சியான தாக்குதல்களை நடாத்துவதே இவரது இலக்காக இருந்துள்ளது. முதற் தாக்குதலிலேயே கைது செய்யப்பட்டமை பெரும் தாக்குதல்களை முறியடித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan