விவசாயிகளுடன் சந்திப்பு இரத்து! - பின்வாங்கும் ஜனாதிபதி மக்ரோன்!
23 மாசி 2024 வெள்ளி 18:20 | பார்வைகள் : 10474
நாளை சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள சர்வதேச விவசாய கண்காட்சியின் (Salon de l'agriculture) ஆரம்ப நாளில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொள்ள உள்ளார். அதன் போது அவர் விவசாயிகளை சந்திப்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி நிமிடத்தில் அந்த சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
விவசாயிகள் நாளையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முவைத்து இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ள உள்ளனர். அரசு தரப்பு பலமுறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எந்த ஒரு இணக்கப்பாடும் வரவில்லை.
நாளை விவசாய அமைப்பினர் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் ஜனாதிபதி மக்ரோன் சமரசத்தில் ஈடுபவார் என இரு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது பிற்போடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan