இயற்கை அனர்த்தம்! - இல் து பிரான்ஸ் உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
21 மாசி 2024 புதன் 20:01 | பார்வைகள் : 18549
புயல், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக இல் து பிரான்ஸ் மாவட்டங்கள் உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Vendée மற்றும் Deux-Sèvres ஆகிய ஒரு மாவட்டங்களிலும் பலத்த மழை பொழியும். Manche, Orne, Calvados, Eure, Eure-et-Loire, Yvelines, Essonne, Seine-Maritime, Paris, Aisne, Nord, Pas-de-Calais, Somme, Oise மற்றும் Val d'Oise ஆகிய மாவட்டங்களில் புயல் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலக் கால்வாய் அண்மித்த பகுதிகளில் மணிக்கு 120 கி.மீ எனும் அதிகபட்ச புயல் வீசும் எனவும், அப்பகுதிகளில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று பெப்ரவரி 21 ஆம் திகதி இரவு முதல் நாளை வியாழக்கிழமை காலை வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan