தொடருந்தில் வைத்து பெண் மீது தாக்குதல்! - ஒருவர் கைது!!
20 மாசி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 16342
மெற்றோவில் வைத்து பெண் மீது தாக்குதல் நடத்திய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்,.
நேற்று பெப்ரவரி 19 ஆம் திகதி திங்கட்கிழமை இச்சம்பவம் Villiers மெற்றோ நிலையத்தில் இடம்பெற்றது. மெற்றோ தொடருந்தில் பயணித்த நபர் ஒருவர், அவருடன் பயணித்த பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார். பின்னர் கத்தி ஒன்றை உருவி எடுத்து அவரை மிரட்டியுள்ளார்.
காலை 9.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் தொடருந்தில் இருந்து இறங்கி, தப்பி ஓடியுள்ளார். காவல்துறையினர் அழைக்கப்பட்டு மெற்றோ நிலைய வாசலில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan