வேலை நிறுத்தம்! (grève) நாளையும் ஈஃபிள் கோபுரம் மூடப்படுகிறது!
19 மாசி 2024 திங்கள் 17:51 | பார்வைகள் : 9720
நாளை இரண்டாவது நாளாக ஈஃபிள் கோபுரம் மூடப்பட உள்ளது. ஈஃபிள் கோபுர ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதை அடுத்து கோபுரம் மூடப்பட உள்ளது.
இரண்டு காரணங்களை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். மிக மோசமான நிதி மேலான்மை மற்றும் ஈஃபிள் கோபுரத்தில் அவசியமாக செய்ய வேண்டிய திருத்தப்பணிகள் இரண்டையும் வலியுறுத்தி CGT மற்றும் FO ஆகிய இரு தொழிற்சங்கத்தினரும் பணியை புறக்கணிக்கின்றனர்.
இன்று பெப்ரவரி 19 ஆம் திகதி ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டிருந்த நிலையில், நாளையும் அது மூடப்பட உள்ளது.
நுழைவுச் சிட்டைகளை பெற்றுக்கொண்ட பார்வையாளர்களுக்கு பணம் மீள வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan