ஒன்பதாவது தளத்தில் இருந்து வளர்ப்பு நாயை தூக்கி வீசிய ஒருவர் கைது!

18 மாசி 2024 ஞாயிறு 20:05 | பார்வைகள் : 12616
ஒன்பதாவது தளத்தில் இருந்து வளர்ப்பு நாயை தூக்கி வீசிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்த மற்றொரு நாயும் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை Nanterre நகரில் இடம்பெற்றுள்ளது. Avenue de la République வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் ஒன்பதாவது தளத்தில் வசிக்கும் குறித்த நபர், தனது வளர்ப்பு நாய் ஒன்றை தடியால் அடித்து, அதை துன்புறுத்தியுள்ளதுடன்., வீட்டின் ஜன்னல் வழியாக அதனை தூக்கி வீசியுள்ளார். ஆனால் அதிஷ்ட்டவசமாக நாய் கீழுள்ள எட்டாவது தளத்தின் பல்கனி பகுதியில் விழுந்துள்ளது.
எட்டாவது தளத்தில் வசிக்கும் நபர் ஒருவர் காவல்துறையினரை அழைத்துள்ளார்.
அதையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மேற்படி நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து மற்றொரு நாயும் மீட்கப்பட்டது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1