Essonne : எரிந்த மகிழுந்துக்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!
18 மாசி 2024 ஞாயிறு 16:31 | பார்வைகள் : 13590
எரிந்த மகிழுந்து ஒன்றுக்குள் இருந்து பெண் ஒருவரது சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் மகிழுந்து ஒன்று தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். Étiolles பகுதியில் RD448 வீதி அருகே நிறுத்தப்பட்டிருந்த மகிழுந்து ஒன்று தீப்பிடித்து விளாசி எரிந்துகொண்டிருந்துள்ளது. தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
மகிழுந்துக்குள் பெண் ஒருவரது சடலம் இருப்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது. 57 வயதுடைய பெண் ஒருவரது சடலமே அது என தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan